எனக்கு என்ஜாய் பண்ணணும்! ஆனால் கணவன் இடைஞ்சல் பண்ணுவார்! அதனால் தான்! ஆசிரியை பகீர் வாக்குமூலம்!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சொந்த கணவரையே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் மொட்டலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தில் பொன்னுரங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பிரியா அருகில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

பத்தாம் வகுப்பிற்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் பிரியா தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் என பலருடன் தவறான தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைப் பற்றி அவரது கணவருக்கு தெரிய வந்துள்ளது. உடனே இதனைக் கேட்டு பொண்ணுரங்கம் அவரது மனைவி பிரியாவை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியா அவருடைய கள்ளக்காதலர்களின் உதவியுடன் கணவர் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அதாவது அருண்குமார் மற்றும் சக்திவேல் ஆகியோருடன் இணைந்து அரங்கத்திற்கு மயக்கமருந்து கொடுத்து இருக்கிறார் பின்னர் அவர் முகத்தில் தலையணையை வைத்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

இந்தக் கொலை முயற்சியில் இருந்து பொன்னுரங்கம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த பொன்னுரங்கம் காரிமங்கலம் போலீசாரிடம் சென்று புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.

மேலும் பொண்ணு ரங்கத்தின் மனைவி பிரியாவை கைது செய்துள்ளனர் விசாரணையின்போது பிரியா தன் கணவரை இதற்கு முன் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் கள்ளக்காதலர்கள் உடன் தொடர்பு வைத்துக்கொள்ள தடையாக இருப்பதால் தன் கணவரை கொலை செய்ய முயற்சித்ததாக பிரியா வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

பிரியா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் கள்ள தொடர்பில் இருந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.