10 வயசு புள்ளைய மிரட்டி..! படம் பிடித்து..! ச்சீ..ச்சீ! வாத்தியார் செய்ற வேலையா இது? அதிர்ச்சியில் பெற்றோர்!

4-ஆம் வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமானது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிரேம்குமார் என்பவர் சில மாதங்களுக்கு முன்னர்‌ "புதுமை படைக்கும்" ஆசிரியர் என்ற பட்டத்தை பெற்றார். 

இதனிடையே அப்பள்ளியில் பயின்று வரும் 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் படங்களை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி நிகழ்ந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் கதறி அழுது கூறியுள்ளார்.

உடனடியாக பெற்றோர் அரசு பள்ளிக்கு சென்று கிராம மக்களுடன் போராட்டம் நடத்தினர். பிரேம்குமார் பிடித்து இழுத்து தர்மஅடி அடித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு பூட்டு போட்டு மூடினர். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேம்குமார் மீது காவல்துறையினர் போக்ஷோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.