ஒரே நேரத்தில் சாதத்துடன் கீரை - மோர் சேர்த்து சாப்பிட்ட இளம் ஆசிரியை! மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்ந்த விபரீதம்!

கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்ட ஆசிரியை ஒருவர் மாரடைப்பிலிருந்து உள்ள சம்பவமானது வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வில்லியனூர் பகுதியில் மேல்சாத்தமங்கலம் என்னும் இடம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு 28 வயது மதிக்கத்தக்க ஆர்த்தி என்ற மகள் உள்ளார். அவர் தன்னுடைய ஆசிரியர் பட்டப்படிப்பை நிறைவு செய்து விட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்று மதியம் வழக்கம்போல ஆர்த்தி தன் வீட்டில் மதிய உணவு உண்டு கொண்டிருந்தார். கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்ட ஆர்த்தி நெஞ்சுப் பகுதியில் அசவுகரியங்களை உணர்ந்துள்ளார். திடீரென்று ஆர்த்தி மயங்கி விழுந்து விட்டார். இதனை கண்ட அவருடைய உறவினர்கள் பதறியடித்து கொண்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு ஆர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மங்களம் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது மேல்சாத்தமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று சில தினங்களுக்கு முன்னர் புதுவையில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டு இறந்து போனார். சின்னகாலாப்பட்டை சேர்ந்த விஜயலட்சுமி என்ற கர்ப்பிணி நண்டு குழம்பு சாப்பிட்டு நெஞ்சுவலியால் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.