அழகிய கணவன்..! அன்பான 2 குழந்தைகள்! ஆனாலும் 39 வயது ஆசிரியை எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படாததால் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் ஆவாரம்பாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட காமதேனு நகர் எனுமிடத்தில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் கௌசல்யா. கௌசல்யாவின் வயது 39. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

கௌசல்யா ஆர்.எஸ்.புரத்திலுள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கௌசல்யா உடல் நலிவுற்று காணப்பட்டிருந்தார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்ட பின்பும் அவருடைய உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் கௌசல்யா மிகுந்த மனவேதனை அடைந்தார். சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கௌசல்யா தூக்கில் தொங்குவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கௌசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.