சுய ஊரடங்கு உத்தரவு..! தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு..!

கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு மற்றும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாகக் கொரொனா வைரஸ் இருந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பலவித முயற்சிகளை கையாண்டு வருகிறது.

அதில் ஒன்றாக ஊரடங்கு உத்தரவை மேற்கொள்ளவேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் அறிவுறுத்தி இருக்கிறார். இதனடிப்படையில் நாளைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். 

இந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் கொரொனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அரசாங்கம் கூறியிருக்கிறது.