குவாட்டருக்கு ரூ.20 கூட கூட்டி வித்துக்கோ! குடிமகன்கள் வயிற்றில் அடித்த டாஸ்மாக் மேனேஜருக்கு நேர்ந்த பரிதாபம்!

அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அதிகாரி லஞ்சம் வாங்கியது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மேனேஜராக ராம்சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார். செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமண்டூர் பகுதியிலுள்ள அரசு மதுக்கடைகளை ஆய்வு செய்தார். அப்போது சில கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 20 ரூபாய் அதிகமாக மதுபாட்டில்களை விற்பனை செய்யலாம் என்றும், அதற்காக தனக்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அளிக்க வேண்டுமென்றும், என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது அரசு டாஸ்மாக் மேற்பார்வையாளரான சுரேஷ்குமார் என்பவருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுரேஷ்குமாரிடம் ஒரு யோசனையை வழங்கியுள்ளனர்.

பணம் கட்டுகளில் ரசாயனத்தை தடவி தருமாறு கூறியுள்ளனர். அதேபோன்று நேற்று மதியம் சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய நோட்டுக்கட்டுகளை சுரேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து நின்று கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ராம்சுந்தரை கையும் களவுமாக பிடித்தனர்.

அவளுடைய அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது கணக்கில் வராமல் 1.56 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.