தீபாவளிக்கான மது விற்பனை இலக்கு நிர்ணயம் !!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 385 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


பொதுவாகவே பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு போன்ற விழாக்களின் போது மதுவிற்பனை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ரூபாய் 370 கோடிக்கு மது விற்பனைக்கு கடந்த ஆண்டு தீபாவளியின் போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் யாருமே சற்றும் யோசிக்காத வகையில் எதிர்பாராதவிதமாக ரூபாய் . 602 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இதன்மூலம் அரசு நிர்ணயித்த தொகையை விட 34 சதவீதம் அதிக லாபத்தை ஈட்டியது. இதே போல் இந்த ஆண்டும் அரசு மது விற்பனைக்கான இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட்டத்தையொட்டி மது விற்பனை ரூபாய் . 385 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது தாக அரசு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மது விற்பனையின் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.