பின்னழகில் கை வைத்தான்..! பதிலுக்கு நான் அதை பிடிச்சி ஒரே திருகு...! டாப்சியால் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

கோவில் என்றும் பாராமல் நடிகை டாப்ஸியின் அந்தரங்கப் பகுதியில் சீண்ட நினைத்த இளைஞரின் கைகளை அவர் தைரியமாக முறுக்கி உடைத்து உள்ளார்.


பிரபல பாலிவுட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை கரீனாகபூர் என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார் . இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை டாப்ஸி பங்கேற்று பேசியிருந்தார். அப்போது தன் வாழ்வில் ஏற்பட்ட பல மறக்க முடியாத சம்பவங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். 

அப்போது பேசிய நடிகை டாப்ஸி, குர்பூராபின் போது நாங்கள் குருத்வாராவுக்குச குடும்பத்தோடு சென்றிருந்தோம். சாமி தரிசனம் செய்த பின்பு அடுத்தபடியாக வெளியில் உள்ள மக்களுக்கு உணவு பரிமாறும் கடைகள் அதிகமாக இருந்தன. அந்த இடம் கூட்டமாக இருந்ததால் மக்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது."

இந்த சம்பவத்திற்கு முன்பும் எனக்கு இதுபோல் பல மோசமான அனுபவங்கள் இருந்தன. ஆனால் அந்த நேரத்தில், நான் அம்மாதிரியான பெரிய கூட்டத்திற்குள் செல்லும்போது இதுபோன்ற ஏதாவது நடக்கும் என்று எனக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது. ஆகையால் நான் சற்று ஜாக்கிரதையாக தான் சென்று கொண்டிருந்தேன்.

இருப்பினும் ஒரு அசம்பாவிதத்தை சந்திக்க நேரிட்டது. என் பின்னாலிருந்து யாரோ ஒருவர் என்னை தவறான நோக்கில் தொடர்வதற்கு முயற்சிப்பதாக என் உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருந்தது. நினைத்ததுபோலவே யாரோ ஒருவர் என்னை பின்னால் இருந்து தொட முயற்சித்தார். இதனால் செய்வதறியாது சற்று யோசித்தேன். ஆனால் சுதாரித்துக்கொண்டு தைரியமாக சிந்தித்து செயல்பட்டேன்.

அதாவது அந்த நபரின் விரலைப் பிடித்து முறுக்கி அந்தப் பகுதியிலிருந்து வேகமாக நகர்ந்தேன் என்று டாப்ஸி அந்த நிகழ்ச்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.