துடிக்க துடிக்க கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியான சம்பவம்! 3 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருக்கு கிடைத்த நீதி!

தாறுமாறாக வந்த டேங்கர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையின் பிரதான சாலைகளில் அண்ணா சாலையும் ஒன்று. இப்பகுதியில் பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் மாணவிகள் ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகத்தில் வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பெண்களின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் ஆஷா,ஸ்ருதி,காயத்ரி என்ற 3 பெண்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த பெண்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

டாங்கர் லாரியை ஓட்டி வந்த ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவமானது 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் நாள் நடைபெற்றது.

கைதுசெய்த ராஜேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பானது நேற்று வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதி, "ராஜேந்திரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்". 

இந்த சம்பவமானது நேற்று சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.