மீண்டும் மழை! 2 நாட்களுக்கு வெளுத்தெடுக்குமாம்..! எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்ட பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஒரு சில பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி எதிர்பார்த்ததைப் போல் நல்ல மழை பொழிவை அளித்துள்ளது . கடந்த சில வாரங்களாக குறைவான மழையையே சந்தித்து வந்த தமிழகம் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழையை பெரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வழங்கியுள்ளது.

குமரி கடல் பகுதியில் நிலவிக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சில இடங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேசமயம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் குறைவான மழையை எதிர்பார்க்கலாம். மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை வருவதற்கு வாய்ப்புண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை 42. சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7. சென்டிமீட்டர் அதிகம் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியது குறிப்பிடத்தக்கது.