தமிழக கொரோனா அடுத்த அதிர்ச்சி..! வீட்டுக்குள் கண்காணிப்பில் இருந்த 31பேருக்கு வைரஸ் தொற்று..!

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


சென்னையில் சுகாதரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, இன்று பாதிக்கப்பட்டவர்கள் 31 nபர். ஆக மொத்தம் 1204 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு கண்காணிப்பில் இருந்தவர்கள் தான் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான் ஊரடங்கு அவசியம் என்று கூறுகிறோம். 21 பேர் ஒரே சோர்ஸ் மூலமாக நோய் தொற்றுக்கு ஆளானவர்கள். ஒருவர் மாநிலத்திற்குள் பயணித்தவர். அவருடன் தொடர்பில் இருந்தவர் 9 பேர் என மொத்தம் 31 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இன்று ஆண்கள் 15 பேர், பெண்கள் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.