தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா..! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்வு..! அதிர வைக்கும் தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் இன்று தாங்களாக முன்வந்து தகவல் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 190 பேர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று தமிழகம் வந்தவர்கள்.தமிழகத்தில் 77,330பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுகண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் மொத்தம் 17 பரிசோதனைக் கூடங்கள் செயல்படுகின்றன. இன்று மட்டும் 110பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது  இவ்வாறு பீலா ராஜேஸ் கூறியுள்ளார்.