வானில் பிறை தெரிந்தது! தமிழகத்தில் நாளை ரம்ஜான்! இஸ்லாமியர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் பிறை தெரிந்த காரணத்தினால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.


இஸ்லாமியர்களின் புனிதத் திருநாளான ரம்ஜானை முன்னிட்டு, அவர்களின் கடமைகளை ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து நிறைவேற்றி, ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடைமைகளில் ஒன்றான 30 நாள்கள் நோன்பிருந்து, அனைவரும் பசியின் தன்மையை அறியும்பொருட்டு ரம்ஜானை வரவேற்கின்றனர்.

அந்த வகையில் இன்று பிறை தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்தார். இதனால் நாளை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஏற்கனவே ரம்ஜான் என்று அறிவித்த நாளின் முதல் நாளில் பிறை தெரியவில்லை. இதனால் அன்றைய தினம் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு ஏற்கனவே அறிவித்த நாளில் சரியாக பிறை தெரிந்தது. இதனால் நாளை ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜானை வரவேற்க தற்போதே இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர்.