கொரோனாவை விரட்ட புரோட்டா மாஸ்க்..! சுடச்சுட விற்பனையாகும் திகுதிகு! எங்கு தெரியுமா?

உலகமே கொரோனாவுக்கு எதிராக போரிட என் 95 உள்ளிட்ட மாஸ்க்குகளை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பரோட்டாவால் மாஸ்க் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.


ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் பார்சல் மூலம் உணவுகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனால் உணவகங்களில் விற்பனை குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த இடம் என்று தெரியவில்லை ஆனால் ஒரு உணவக உரிமையாளர் வித்தியாசமாக யோசித்துள்ளார்.

கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த உணவகத்தில் மாஸ்க் வடிவில் பரோட்டா தயாரிக்கப்படுகிறது. இதனையும் மக்கள் ஆர்வத்துடன் பார்சல் கட்டி வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் பரோட்டா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்தி கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அதே சமயம் நிலவரத்திற்கு ஏற்ப மாஸ்க் வடிவில் பரோட்டா தயாரித்து விற்பனை செய்து வரும் அந்த கடைக்காரருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. ஆனால் அவர் எந்த கடைக்காரர், எங்கு இப்படி விற்பனை செய்கிறார் என்கிற தகவல் கிடைக்கவில்லை.