கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய்! தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் அனைவரும் தப்பிப்பதற்காக பல விதமான யோசனைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் மிக முக்கியமாக கூறப்படுவது சோஷியல் டிஸ்டன்ஸிங் என்றழைக்கப்படும் சமூக விலகல் ஆகும்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த புராண வைரசால் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவில் இதுவரை 7 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசாங்கம் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண தொகையாக ரூபாய். 1000 வழங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதி வழங்குவதற்காக ரூபாய். 3250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். 

மேலும் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வரும் ஏப்ரல் மாதம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் டோக்கன் முறையில் இந்த ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு பொதுமக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.