வாய் பேச முடியாதவர்களும்,காது கேளாதவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

இனி காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் ஆகியோர் எந்த தடையுமின்றி தேர்தலில் போட்டியிடலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.


பொதுவாகவே தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும். அந்த வகையில் காது கேளாதோர் , வாய் பேச முடியாதோர் மற்றும் தொழு நோயாளிகள் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர்கள் என சட்டம் உள்ளது.

   ஒருவேளை வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் காது கேளாமல், வாய் பேச முடியாமல் இருந்தாலும் அல்லது தொழு நோயாளியாக காணப்பட்டாலும் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி அவர்களது வேட்புமனுவை நிராகரிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது.

இந்த சட்டமானது நீக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் குரல் எழுப்பப்பட்டது. அதனடிப்படையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதனைக் குறித்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. மேலும் அந்த சட்டத் திருத்தம் சட்டசபையில் நிறைவேற்றிய வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசு இந்த சட்டத்தை தங்களுடைய அரசாணையின் மூலம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் காது கேளாதோர் வாய் பேச இயலாதோர் மற்றும் தொழிலாளிகள் ஆகிய அனைவரும் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி தேர்தல்களில் போட்டியிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.