இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா..! தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 550ஐ தாண்டியது..!

தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது.


சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள். இதன மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து சுமார் 8 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த கொரோனா பாதித்து உயிரிழந்த நபர் குறித்து அவரது குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியமாக இல்லை. தொடர்ந்து தமிழகத்தில் உச்சகட்ட உஷார் நிலை உள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை கொரோனோ 2வது நிலையில் தான் உள்ளது. இன்னும் சமூகத் தொற்றாக கொரோனா மாறவில்லை. இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார்.