தமிழகத்தில் 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கு 4 பேர் பலி..! பதுங்கிப் பாயும் கொரோனா..! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

தமிழகத்தில் நேற்று காலையில் இருந்து தற்போது வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் முதல் நபராக மதுரையை சேர்ந்த 54 வயது நபர் ஒருவர்கொரோனாவுக்கு சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 58 வயது நபர் நேற்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானர். மேலும் தேனியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி நேற்று மாலை பலியானார்.

இவர்கள் மூன்று பேருமே கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு பலியாகினர். இந்த நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது நபர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 3ந் தேதி உயிரிழந்தார். அவரும் கொரோனாவுக்கு உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 61 வயது நபர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த நிலையில் கெரோனா உறுதி செய்யப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆகியுள்ளது.

அதிலும் கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக கொரோனாவிற்கு 4 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாகி வந்த சூழலில் பலி எண்ணிக்கையும் அதிகமாவதால் அந்த நோய் பதுங்கிப் பாய்கிறதோ என்கிற சந்தேகம் மருத்துவர்களுக்கு வந்துள்ளது.