தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அழகிரியை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவரானார் அழகிரி! திருநாவுக்கரசர் பதவி பறிப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த
திருநாவுக்கரசர் அந்த பதவியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல்
முடியும் வரை தான் தான் பதவியில் இருப்பேன் என்று கூறி வந்த நிலையில்
திருநாவுக்கரசரை அதிரடியாக நீக்கியுள்ளார் ராகுல்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய
தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
ஏற்கனவே கடலூர் தொகுதியில் எம்.பியாக இருந்தவர்.
இதுமட்டும் அல்லாமல் வர்த்தக காங்கிரஸ் தலைவராக
இருந்த வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகியுள்ளார். அவரோடு சேர்த்து
மயூரா ஜெயக்குமார், விஷ்னு பிரசாத், கே.ஜெயக்குமார் ஆகியோரும் செயல் தலைவர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில்
இருந்து செல்லும் திருநாவுக்கரசரின் பணிகளை பாராட்டுவதாக அறிக்கையில் ராகுல்
காந்தி கூறியுள்ளார். உடனடியாக அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக
பொறுப்பேற்க உள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சரியான நபராக இருப்பார் என கருதி அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கப்பட்டுள்ளார்.