தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா..! மொத்த எண்ணிக்கை 124ஆக உயர்வு..!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது.


தமிழ்நாட்டில் நேற்று வரை 67 பேருக்கு கொரோனா இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே இன்று மாலை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ட்வீட் வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் 45 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 50 பேரும் நெல்லை, கன்னியாகுமரி, நாமக்கல் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.