தமிழக தலைமை நீதிபதி தாஹில் ரமானி ராஜினாமா! பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்!

மெட்ராஸ் ஹைக்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த விஜய தாஹில் ரமானி தன்னை மேகலாயவுக்கு மாற்ற வேண்டாம்,என்று கேட்டுக்கொண்ட பிறகும் அதை உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.


ரமானி தன் பதவியை ராஜினாமா செய்துவிட முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. இந்தியாவின் நான்கு பெரிய நீதிமன்றங்களில் ஒன்று சென்னை உயர் நீதி மன்றம். நீதிபதிகளாக ஆகும் ஒவ்வொருவரும் இந்த நான்கு நீதிமன்றங்களில் ஒன்றுக்கு தலைமை நீதிபதியாக ஆக வேண்டும் என்ற கனவுடனே வருவார்கள்.

மும்பையில் பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கிய ரமானி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனவுடன் அவரது அடுத்த பதவி உயர்வு உச்சநீதிமன்ற நீதிபதியாகத்தான் இருக்க வேண்டும்.ஆனால், ரமானிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கொடுத்த அடுத்த பதவி மேகாலயா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி.

சென்னை ஹைகோர்ட்டுடன் ஒப்பிட்டால் மேகாலயா நீதிமன்றம் சின்னஞ்சிறயது.கிட்டத்தட்ட 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவில் மூன்றாவது பெரிய உயர் நீதிமன்றம். ஆனால் மேகாலயா உயர்நீதிமன்றம் இந்தியாவிலேயே மிகச்சிறிய இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று.

தலைமை நீதிபதியையும் சேர்த்தே அங்கு மொத்தம் மூன்று நீதிபதிகள்தான். வழக்குகளின் என்னிக்கை சென்னையோடு ஒப்பிட்டால் நூறில் ஒரு பங்குதான்.அதனால் அத்தனை சின்னஞ்சிறு நீதி மன்றத்துக்கு தன்னை மாற்றுவதை விரும்பாத ரமானி,தன்னை மேகாலயாவுக்கு மாற்ற வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்தை கேட்டுக்கொண்டும்,அது நிராகரிக்கப் பட்டுவிட்டதாம்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாத ரமானி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் தெரிவித்து இருந்தார்..1958ல் பிறந்த ரமானிக்கு இன்னும் ஓராண்டு பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்ய இருப்பது பரபரப்பாக பேசப்பட்டது. .எப்படி இருந்தாலும்,விஜய தாஹில் ரமானி எழுதப்போகும் சுயசரிதை 'பெஸ்ட்செல்லர்' ஆகப்போவது நிச்சயம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரமானி இரவு விருந்து கொடுத்தார். மேகாலயா செல்ல உள்ளதால் இந்த விருந்து என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர் தான் தனது பதவியை ராஜிமான செய்துவிட்டதாகவும், அதற்கான கடிதத்தை உரியவர்களுக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறி அங்கிருந்தவர்களை ரமானி அதிர வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.