எடப்பாடியார் போட்ட முட்டுக்கட்டை..! தமிழகத்தில் மட்டும் ரயில்கள் ஓடாது..! ஏன் தெரியுமா?

நாடு முழுவதும் முதற்கட்டமாக நாளை 15 ரயில்களின் சேவை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் ரயில் சேவைகளை தொடர வேண்டாம் என்று மத்திய அரசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


நாடு முழுவதும் 3வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சுமார் 48 நாட்களுக்கு பிறகு நாளை முதல் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு 15 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்க கோரினார். மேலும் மே மாதம் 31ந் தேதி வரை தமிழகத்தில் பொதுப்போக்குவரத்தை துவங்க கூடாது என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் தமிழகத்தில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தை துவங்கும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். இதனால் தமிழகத்தில் இருந்து பிற நகரங்களுக்கு ரயில் சேவை துவங்குவது தாமதம் ஆகும் என்று தெரிகிறது.