கல்யாண வீட்ல இவ்ளோ தான் மொய் வாங்கனும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு?

சென்னை : அரசு ஊழியர்கள் தாங்கள் குடும்ப விழாக்களில் வெகுமதி வாங்க தமிழக அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.


தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சொர்ணம் நேற்று வெளியிட்டு அரசாணையில் கூறியிருப்பதாவது: 

தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் நடத்தும் விழாக்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரும் வெகுமதிகளை அதிகபட்சமாக ரூ.25 ஆயிரத்துக்குள் மட்டுமே வாங்க வேண்டும்.

அந்த விழாவுக்கு அதிகபட்சமாக மொத்தமாக ரூ.10 லட்சம் அல்லது அவர்களது 6 மாத சம்பளம் இதில் எது குறைவோ அந்த தொகையில் மட்டுமே மொத்த வெகுமதியும் இருக்க வேண்டும்.

மேலும் அரசு ஊழியர்கள் நண்பர்களிடம் ரூ.5 லட்சம் வரை மட்டுமே கடனாக வாங்கலாம். அதுவும் வீடு கட்டுவதற்கும் மற்றும் அபார்ட்மெண்ட் வீடு வாங்க மட்டுமே கடன் வாங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.