பாஜக - தேமுதிக கூட்டணி இழுபறி ஏன்? தமிழிசை வெளியிட்ட புது தகவல்!

தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.சில இடங்களை தேமுதிக கேட்பதால் கால அவகாசம் ஆகிறது என தமிழிசை பேட்டி


சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை  சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;- 

பிரதமரின் வருகை மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதை நேற்றைய கூட்டம் உணர்த்தியிருக்கும்

விருதுநகர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பல பொய்யான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.ஜெ.பெயரை ஓட்டுக்காக மோடி பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.ஆனால் விதிமுறைகளை மீறி  ஜெ.வீட்டிற்கு சென்று அவரின் உடல்நலம் விசாரித்தவர் மோடி

காமராஜரின் பெயரை உச்சரிக்க தகுதியான கட்சி பாஜகதான்.ஆனால் காமராஜரை தோற்கடித்த திமுகவிற்கு தகுதியில்லை.

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இன்றும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் கீழடியில் அகழ்வாராய்ச்சி மறுக்கப்பட்டிருப்பதாக பொய்யான தகவலை ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஊழலைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு தார்மீக உரிமையில்லை.கடந்த காலங்களில் ஒரு ஊழலை செய்துதான் திமுக ஆட்சியை இழந்தது

திமுக கூட்டணி பலமிலந்த கூட்டணி என்பதால் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்

அதிமுக ஊழல்கள் மீது விசாரணையில் உள்ளது.அதிமுகவினர் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்கள்

தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.சில இடங்களை தேமுதிக கேட்பதால் கால அவகாசம் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...