அம்மா வீட்டிற்கு வரும் குழந்தையைப்போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்! தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உருக்கம்!

அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைகளை போல் தான் தமிழகத்திற்கு ஓடி வருவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.


தமிழகத்தில் பாஜக கட்சியின் தலைவராக இருந்து வந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் சிறப்பான வெற்றியை பாஜக அடைந்தது . ஆனால் தமிழகத்தில் மட்டும் அதனுடைய கொடியை நிலைநாட்ட இயலவில்லை.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தமிழிசையால் பாஜக கட்சிக்கு எந்த ஒரு வெற்றியையும் அளிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது . இதனால் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப் பட்டார் தமிழிசை சவுந்தரராஜன்.

இதனையடுத்து இவர் விரைவில் மாற்றப்படுவார் என்று பாஜக கட்சியை சேர்ந்த பொன்ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கடந்த மார்ச் மாதம் 8- ம் தேதி தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்றார். 

இருப்பினும் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். அந்த வகையில் தமிழக மருத்துவர் கூட்டமைப்பு சங்கத்தின் பாராட்டு விழாவில் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார்.

 அப்போது பேசிய அவர் தமிழகத்திற்கு அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல் நான் ஆசையாக வருவதாக கூறியிருந்தார் . மேலும் பேசிய அவர் ஒருபோதும் கர்வம் தலைக்கேறாமல் இருப்பேன் எனவும் கூறினார். பின்னர் தெலுங்கானா ஆளுநர் மாளிகையை மக்கள் வந்து போகும் சாதாரண இடமாக நான் மாற்றி உள்ளேன் என்று பெருமையாக கூறினார்.