நாங்கள் குற்றப் பரம்பரை அல்ல! கற்றப் பரம்பரை! சீண்டிய தமிழிசை! கொதிக்கும் தேவர் சமுதாய இளைஞர்கள்!

நாங்கள் கற்றப் பரம்பரை குற்றப் பரம்பரை அல்ல என்று தமிழிசை போட்ட ட்வீட்டால் தென் மாவட்டங்களில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்பு மனு மீது நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை நடைபெற்றது.

அப்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றில் இயக்குனராக இருப்பதை தமிழிசை மறைத்து வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து தமிழிசையின் வேட்புமனு பரிசீலனையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நிறுத்தி வைத்தார்.

தமிழ் இசைக் கல்வி தொடர்பான ஆவணங்களில் ஏற்பட்ட பிரச்சனையால் வேட்புமனுத்தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை நாங்கள் கற்ற பரம்பரை குற்றப்பரம்பரை அல்ல என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார்.

இந்த ட்வீட்டை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் குற்றப் பரம்பரை என்று தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய தேவர் சமுதாயத்தினர் ஆங்கிலேயர்கள் குறிப்பிடுவர். இந்த நிலையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கற்ற பரம்பரை என்று கூறி தங்கள் சமுதாயத்தை இழிவு செய்து விட்டதாக தேவர் சமுதாய இளைஞர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

இதனால் அரண்டு போன தமிழிசை உடனடியாக தனது அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். ஆனாலும் கூட கோபம் குறையாமல் தேவர் சமுதாய இளைஞர்கள் தமிழிசைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.