தமிழன்னா கிங்குடா! உத்திரபிரதேசத்தில் கெத்து காட்டிய கோவை மாணவர்கள்! முதல் பரிசை தட்டிச் அசத்தல்!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அறிவியல் சார்ந்த போட்டியில் கலந்துகொண்ட கோவை மாவட்டத்தை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை புரிந்திருக்கும் சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.


இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு துறையானது மாணவர்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் பல்வேறு அறிவியல் சார்ந்த போட்டிகளை நடத்தி வருகிறது. தற்போது "ஹார்டுவேர் ஹேக்கத்தான்" என்ற முறையில் நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வதற்கு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஹார்டுவேர் ஹேக்கத்தான் என்பது திறமையான மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி சமுதாய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான வழியாகும். 8- ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மனிதவள மேம்பாட்டுத்துறையானது  உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த போட்டியை நடத்தியது. இதேபோன்று இந்தியா முழுவதிலும் 18 மையங்களில் இந்த போட்டியை நடத்தியது. 

பல்வேறு நகரங்களை சேர்ந்த புகழ் பெற்ற கல்லூரிகள் பல நூற்றுக்கணக்கான மாணவர்களை போட்டியில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைத்தது. தமிழ்நாட்டில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

அவர்கள் "LOW COST VAPOUR RECOVERY SYSTEM AT FUEL STATION" (லோ காஸ்ட் வேப்பர் ரிகவரி சிஸ்டம் இன் ப்ஃயுல் ஸ்டேக்ஷன்) என்ற கருவியை தயாரித்தனர். இந்த கருவியின் மகத்துவம் என்னவென்றால், எரிபொருள் நிலையங்களில் வண்டியில் எரிபொருளை நிரப்பும் போது இந்த கருவியை எரிபொருளை வாயுவாக ஆக விடாமல் தடுக்கின்றது.

பல்வேறு போட்டி நடுவர்கள் இந்த தயாரிப்பை கண்டு வியந்தனர். இறுதியாக இந்த தயாரிப்பிற்கு முதல் பரிசு கிடைத்தது. மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துவிடும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.