என்னை பார்த்து மோடி அப்படி கேட்டுவிட்டார்..! நெகிழ்ச்சியில் கண் கலங்கிய பேட்டரி கார் டிரைவர்!

இந்திய பிரதமரும், சீன அதிபரும் சென்ற பேட்டரி காரை இயக்கிய ஓட்டுநர் மிகவும் பெருமைப்படுவதாக கூறியிருப்பது நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீன அதிபர் ஜின்பிங் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை புறநகரான மாமல்லபுரத்திற்கு வருகை தந்திருந்தார். அவரை வரவேற்ற இந்திய பிரதமர் மோடி அவருக்கு மாமல்லபுரத்தின் கலை நயங்களை குறித்து விரிவாக்கம் செய்துவந்தார்.

அப்போது தமிழகத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் பேட்டரி காரில் மோடியும், ஜின்பிங்கும் பயணம் செய்தனர். அப்போது மூடி தன்னிடம் உரையாற்றியதாக தேவேந்திரன் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

சம்பவத்தின்போது அனைவரும் எனக்கு கை கொடுத்தார்கள். நான் வழக்கமாக ஓட்டுவதை போன்றுதான் ஓட்டினேன். அவருடன் 5 வருடங்களாக பணியாற்றிவரும் கமாண்டோ ஒருவர், உன்னிடம் அவர் பேசினாரா என்று கேட்டார். நான் ஆம் அவர் என்னிடம் பேசினார் என்று கூறினேன். உடனே அவர், "உனக்கு அதிர்ஷ்டம் அதிகம்" என்று கூறினார்.

மேலும் என்ன பேசினார் என்று கேட்டார். பிரதமர் மோடி அவர்கள் என்னிடம் என் பெயரை கேட்டார். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உழைக்கிறாய் என்று அவர் கேட்டதற்கு, 8 மணி நேரம் என்று கூறினேன். என்னுடைய குடும்பத்தினரை பற்றி அவர் விசாரித்தார். அப்போது நான் என் மகள் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்து வருவதாக கூறினேன்.

உடனே அவர் "உன்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது" என்று கூறினார். அதைக் கேட்டவுடன் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் கசிந்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவங்களும் ஒன்றாக இதனை கருதுகிறேன்" என்று கூறினார்.

இவருடைய பேட்டியானது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.