தமிழனை காதலித்து கரம் பிடித்த அமெரிக்க பெண்! காரைக்குடியில் உற்சாக திருமணம்! தடல் புடல் விருந்து!

தமிழக கலாச்சாரத்தின் படி அமெரிக்கப்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்டிருபப்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட தட்டடி புதூர் கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தவமணி.  இத்தம்பதியினருக்கு கந்தசாமி என்ற மகன் உள்ளார்.

கந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சி படிப்பிற்காக அமெரிக்காவிலுள்ள சிகாகோ மாகாணத்திற்கு சென்றார். தற்போது இவர் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அமெரிக்காவில் காப்பீட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த எலிசபெத் என்ற பெண்மீது கந்தசாமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்னர் இருவரும் தமிழகம் வந்தனர். தங்களுடைய காதலை பற்றி கந்தசாமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நேற்று இவர்களது திருமணமானது காரைக்குடி பகுதியில் நடைபெற்றுள்ளது. கந்தசாமியின் உறவினர்களும், சுற்றுவட்டார கிராம மக்களும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். தற்போது இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.