தென் சென்னை! கெத்து காட்டும் தமிழச்சி! ஜெயக்குமார் மகன் பின்னடைவு!

தென் சென்னை நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு  எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.

இதில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வந்தவண்ணம் உள்ளன. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் தமிழக மாநிலத்தின் லோக் சபா தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்சென்னை தொகுதியில் திமுக வின் தமிழச்சி தங்கபாண்டியன் சுமார் 2000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. அதிமுக சார்பில் ஜெயக்குமாரின் மகன் இந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுக வினர் உற்சாகத்தில் உள்ளனர்.