ஆஸ்திரேலிய நாட்டு பள்ளிகளில் தமிழ் கல்வி ! 2வது மொழியாக கற்பிக்கும் அதிசயம்!

இந்தியாவை விட அதிக பரப்பளவு கொண்ட நாடாக இருந்தாலும் ஆஸ்திரேலிய மக்கள் தொகை கேரளத்தை விடக்குறைவுதான்.


இந்த நாட்டில் உள்ள நியூ செளத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழி அறிமுகப்படுத்தபடுகிறது. ஆஸ்த்திரேலிய மக்களின் பெரும் பகுதியினர் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதனால் உலகில் அதிகமக்களால் பேசப்படும் மொழிகளை ஆஸ்த்திரேலிய பாடத்திட்டத்தில் 2வது மொழியாகச் சேர்க்கிறார்கள்.

அந்த வரிசையில் வரும் கல்விஆண்டில் முதல் வகுப்பில் இருந்து +2 வரை தமிழ் கற்பிக்கப்படும்.ஆஸ்த்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் வசிப்பவர்களில் 39 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். ஆஸ்த்திரேலிய சமூகம் நவீனகால சமுதாயற்றை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதால் பல்வேறு மொழிகளை 2 வது மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்வதாக ஆஸ்த்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வரிசையில் தமிழ் ,இந்தி,பஞ்சாபி,பெர்ஷியன்,மாசிடோனியன் ஆகிய மொழிகள் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. ஆஸ்த்திரேலிய நாட்டில் இரண்டாவது மொழியாக மொத்தம் 69 மொழிகள் கற்பிக்கப் படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.ஒரே நாடு ஒரே மொழி கோஷத்தை இன்னும் அந்த நாட்டு அரசியல் வாதிகள் கேள்விப்படவில்லையோ.