இன்றைய நாள் பலன்

நவம்பர் 21, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 21, 2018

கார்த்திகை 5 – புதன்கிழமை

இன்று மிலாடி நபி.   மனிதர்கள் தவறான பாதையில் சென்ற காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்களாக நபிமார்கள் விளங்கினர்.

அரபுநாட்டில் வாழ்ந்தவர்களின் நிலைமை படுமோசமாக இருந்த காலத்தில், அங்கே குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோத செயல்கள் நடப்பதுமாக இருந்தது. 

இத்தகைய பாவகரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணிதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.  

அவர் பிறந்த தினத்தையே மிலாடி நபி என்று கொண்டாடுகிறோம்.  அவர்கள் மிகவும் நேர்மையானவர்.  அவர் கூறிய அறிவுரைகளை பின்பற்றி நன்மை அடையுங்கள்

 

 நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 9:15 முதல் 10:15 வரை

       மாலை 4:45 முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      பிற்பகல் 12:00 முதல் 1:30 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  தங்கள் விருப்பம் போல் அனைத்தும் நடக்கும்.

ரிஷபம்:  நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள்

மிதுனம்: செய்யும் செயலில் துணிச்சல் இருக்கும்

கடகம்: அஞ்சா நெஞ்சம் வேண்டும்.  பயத்தை தவிர்கவும்

சிம்மம்: செலவுகள் ஏற்படலாம்

கன்னி: பேரும் புகழும் கிட்டும்

துலாம்: ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யாதீர்கள்

விருச்சிகம்: தொழிலில் சிறு நஷ்டம் ஏற்படலாம்

தனுசு: உங்கள் துணிச்சலால் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள்

மகரம்: பெருமைப்படும் நாளிது

கும்பம்: பொறுமையை கடைப்பிடியுங்கள்

மீனம்: மனசங்கடங்கள் இருக்கும்.  தியானம் செய்யுங்கள், கவலைகள் தீரும்