நவம்பர் 14, 2018
இன்றைய ஆன்மிக செய்தி

சத் பூஜா என்பது
இந்து மதத்தின் பழமையான பூஜைகளில் ஒன்று. பீகார்,
உத்திரபிரதேசம், நேபால் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் இதை விமர்சயாக கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் நவம்பர் மாதம் 11 முதல் 14 வரை சத்
பூஜா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பூமியில்
கிடைத்த வாழ்க்கைக்கு சூரிய பகவானுக்கும், அவருடைய மனைவிகள் உஷா மற்றும் சந்தியாவுக்கும்
நன்றி சொல்லும் வகையில் இந்த பூஜையை கொண்டாடுகிறார்கள். இந்த 4 நாட்கள் மக்கள் விரதமிருந்து, சூரிய பகவானுக்கு
படையலிட்டு தங்கள் வேண்டுதலை பகவானிடம் முறையிடுகின்றனர்.
இந்த பூஜா வருடத்தில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது. கோடையில் ஒன்றும் குளிர் காலத்தில் ஒன்றும். கோடையில் கொண்டாடப்படும் பூஜா கார்திக் சத்(தீபாவளி
முடிந்து 6வது நாள்) என்றும், குளிர் காலத்தில் கொண்டாடப்படும் பூஜா சதி சத்(ஹோலி பண்டிகை
முடிந்து சில தினங்களில் தொடங்கும்) என்றும் அழைக்கப்படுகிறது.
பழைய காலத்தில் திரௌபதியும் பாண்டவர்களும் அவர்கள் இழந்த
நாட்டை திரும்பப்பெறுவதற்காக சூரியனை நோக்கி வேதங்கள் ஜபித்து இந்த பூஜையை செய்ததாக
வரலாறு கூறுகிறது.
இதை நாமும் கடைபிடித்து பயன் அடையலாமே!!