சிக்கி தவிக்கும் சுர்ஜித்.. மீட்க விரைந்த சினிமா கலைஞர்கள் ! நெகிழ வைக்கும் செயல் !!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்பதற்காக சென்னையிலிருந்து சினிமா சண்டைக்காட்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் மணப்பாறைக்கு விரைந்துள்ளனர்.


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்னும் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் இரண்டு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தும் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக சென்னையிலிருந்து 10 பேர் கொண்ட குழு திருச்சியில் உள்ள மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுபட்டிக்கு விரைந்துள்ளது. இந்த சினிமா கலைஞர்கள் சினிமாக்களில் சண்டைக் காட்சிகளை அமைப்பதற்காக அதிநவீன கருவிகளை தாங்கள் வைத்திருப்பதாகவும் அதனை பயன்படுத்தி நிச்சயம் கிணற்றில் இருந்து குழந்தையை காப்பாற்ற இயலும் எனும் நம்பிக்கையுடன் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.