பிரபல இந்தி நடிகையை காதலிக்கும் பிரபல தமிழ் நடிகை! வெளியானது விவகாரமான டிரெய்லர்!

நடிகைகள் காதல்


   பிரபல இந்தி நடிகையை பிரபல தமிழ் நடிகை காதலிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

   தமிழ் தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வருபவர் ரெஜினா காசன்ட்ரா. தமிழில் சிவகார்த்திகேயனுடன் இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்திருப்பார். மேலும் உதயநிதி ஸ்டாலினுடன் இவர் சரவணன் இருக்க பயமேன் என்கிற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் உதயநிதியும் – ரெஜினாவும் இணைந்து எம்புட்டு இருக்குது ஆசை எனும் பாடலில் செம ரொமான்ஸ் செய்திருப்பார்கள்.

   அந்த ஒரே பாடல் மூலம் தமிழகத்தின் இளசுகள் மனதை ரெஜினா கொள்ளை கொண்டிருப்பார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் ரெஜினா பிசியாக இருந்து வருகிறார். மேலும் இந்தி படம் ஒன்றிலும் அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படத்தின் பெயரை ரெஜினா மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். ஏனென்றால் அந்த படம் மிகவும் விவகாரமான கதையை கொண்டது என்பது தான்.

   இந்த நிலையில் ஏக் லட்கி கோ தேகா தோ அய்சா லகா எனும் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதன் மூலம் அந்த படத்தில் தான் ரெஜினா நடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் டிரெய்லரில் கடைசி ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் ரெஜினா வருவார். அதுவும் கூட கண்டுபிடிக்க முடியாது. இருந்தாலும் கூட தற்போது தான் அந்த இந்திப்படத்தில் நடித்துள்ளதை ரெஜினா ஒப்புக் கொண்டார். அந்த படத்தில் ரெஜினிவுடன் பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் நடித்துள்ளார்.

   சோனம் கபூர் வேறு யாரும் இல்லை, நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த ஏக் லட்கி கோ தேகா தோ அய்சா லகா இந்திப்படத்தில் திருமணத்தை வெறுக்கும் கேரக்டரில் சோனம் நடித்துள்ளார். ஆண்களுடன் திருமணத்தை வெறுக்கும் ரெஜினா தீவிரமாக ஒரு பெண்ணை காதலிப்பார். அந்த பெண்ணும் சோனத்தை நேசிப்பார்.

  சோனத்தை காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பது வேறு யாரும் இல்லை சாட்சாத் ரெஜினா தான். இந்தியில் பல நடிகைகள் லெஸ்பியன் கேரக்டரில் நடித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் இருந்து ஒரு நடிகை அதுவும் தமிழிலில் பிசியான கதாநாயகியாக இருக்கும் ரெஜினா லெஸ்பியனாக நடித்திருப்பது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.