எடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்..! இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு

கொரோனா தொற்று காலத்திலும், இந்தியாவிலேயே பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனை செய்துவருகிறது தமிழகம் என்றால், அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டல்தான் காரணம் என்பதில் மிகையில்லை.


அதனால்தான், முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் இடம், கொரோனா தொற்று பரிசோதனை, சிகிச்சையில் முதல் இடம், சிறந்த நிர்வாகத்தில் முதல் இடம் போன்ற பல சாதனைகள் படைத்தது தமிழகம்.

இப்போது, எடப்பாடியாரின் நிர்வாகத்திற்கு மேலும் ஒரு நற்சான்றிதழ் பத்திரமாக, இந்தியா டுடே கருத்து கணிப்பில், இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்,. தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. நீர் மேலாண்மை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் தமிழக முதல்வருக்கு கடிதமாக தெரிவித்துள்ளது.

வரும் 5ம் தேதி நடைபெற உள்ள இந்தியா டுடே ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ் இ-கான்க்ளேவ் விருதுகள் 2020 விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விருது வழங்கப்பட உள்ளது.. நாமும் வாழ்த்துக்களை சொல்லிவைப்போம்.