இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம். முதல்வர் பழனிசாமி ஆட்சியில் மீண்டும் பொருளாதார மேம்பாட்டு சாதனை..!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தமிழகம் வெற்றிநடை போட்டுவருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் வாய் கூசாமல் பொருளாதார வளர்ச்சி இல்லை என்று கூச்சலிட்டு வருகின்றன.


எதிர்க் கட்சிகளின் வாயை அடைப்பது போன்று தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் தேசிய சராசரியை விட அதிக வளர்ச்சி வீதத்தைக் கொண்டிருக்கிறது தமிழகம். குறிப்பாக, கொரோனா பேரிடரால் உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும் சூழலில், இந்திய அளவில் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக பொருளாதார மேம்பாட்டை எட்டி சாதனை படைத்திருக்கிறது தமிழகம்.

2019-20 நிதியாண்டில் தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 4.2 ஆக இருக்கும் அதே சமயத்தில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 8.03 ஆக உள்ளது. கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி. இது போலவே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பட்டியலில் 12வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

அதுமட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதுவரை முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளிவிட்டு தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது தமிழகம். அது மட்டுமின்றி, கடந்த காலாண்டில் இந்தியாவிலேயே அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம். இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 236 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழகம் பெற்றிருக்கிறது.

எல்லா நேரமும் தமிழகத்தின் நன்மைக்காகவே சிந்தித்து செயலாற்றும் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறனுக்கு இந்த சாதனைகள் உதாரணமாகத் திகழ்கிறது. இவரது ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் எல்லா துறைகளிலும் நம்பர் ஒன் என்ற அளவுக்கு முன்னேறுவது உறுதி.