இந்தியாவிலேயே தமிழகம்தான் சுகாதாரத்தில் நம்பர் ஒன்..! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.

இந்திய நாட்டிலேயே சுகாதாரப் பணிகளில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக் தொடங்குவதாக அறிவித்திருந்த வகையில், இன்று சென்னையில் முதல் கட்டமாக ராயப்பேட்டையில் அம்மா கிளினிக்கை தொடங்கிவைத்தார். அந்த வகையில் இன்று 630 கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது. 

இந்த விழாவில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், ‘மருத்துவத் துறையில் தொடர்ந்து தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி சாதனை படைத்துள்ளோம். இந்த வகையில் மருத்துவக் கல்லூரிகளை அதிகரித்ததன் மூலம் 5,300 பேர் மருத்துவம் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிய காரணத்தால் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ‘120 கோடி ரூபாயில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளைவிட உயர்தர சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன’ என்றும் தெரிவித்தார்.

உண்மையை உரக்கச் சொல்ல வேண்டியதுதானே.