சூரப்பாவை விரட்டும் தமிழக அரசு..! ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானால்..?

அண்ணா பல்கலை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த முடிவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா. மேலும், அரியர் பாடங்கள் பாஸ் முடிவிலும் தமிழக அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.


இந்த நிலையில், சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட காரணத்தால், தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது.

 சூரப்பா பதவியேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை அண்ணா பல்கலைகழக நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும், பணி நியமனம் உள்ளிட்ட அனைத்தும் விசாரிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து நீதிபதி கலையரசன் இன்று, ‘’ சூரப்பா தொடர்பான முறைகேடு மற்றும் ஊழல் குறித்து யார் வேண்டுமானாலும் தன்னிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் , உரிய ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அந்த புகார்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்’’ எனவும் கலையரசன் தெரிவித்துள்ளார். 

சூரப்பா மீதான குற்றம் நிரூபணமானால், அவரது பதவிக்கு ஆபத்து ஏற்படுவதுடன் லஞ்சக் குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்லவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.