பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

விரைவில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. ஆகவே, வடகிழக்கு பருவமழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.


அப்போது பேசிய முதல்வர், ‘’ அத்தியாவசிய துறைகளின் மூலம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. பருவமழையை எதிர்கொள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகிறது. சோதனையான நேரத்தில் அரசு அறிவிக்கும் விதிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 புயலின்போது சாலைகளில் மரங்கள் விழுந்தால், அதை உடனடியாக அகற்ற இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் காலத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர். மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்காக தகவல் தொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. 90% தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்றுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது மழை காலங்களையும் சிறப்பாக கையாள்வதற்கு தயாராக இருக்கிறார்.