முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வீட்டை இடிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சசிகலாவின் வீட்டை தரைமட்டமாக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா ஆவார். சசிகலாவிற்கு சென்னையைப் போலவே தஞ்சையிலும் பல வீடுகள் உள்ளன.
அந்தவகையில் சசிகலாவுக்கு சொந்தமாக தஞ்சாவூரில் உள்ள மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் வீடு உள்ளது.
மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கும் இந்த வீட்டில் மனோகர் என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகில் பள்ளிக்கூடமும் அமைந்துள்ளது.
இந்த வீட்டின் கட்டிடத்தை மாநகராட்சி ஆணையர் ஜானகி இரவீந்திரன் என்பவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த கட்டிடம் மிகவும் பழுது அடைந்துள்ளது எனவும் இதில் மனிதர்கள் வசிக்க கூடாது எனவும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் இந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கும் அதை சுற்றி இருப்பவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஏனெனில் இந்த கட்டிடமானது எந்த நேரத்திலும் தானாகவே இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் இது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆகையால் உடனடியாக இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி இரவீந்திரன் , அந்த வீட்டின் உரிமையாளரான திருமதி. சசிகலாவிற்கும், அந்த வீட்டில் வசித்து வரும் மனோகர் என்பவருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர்.
மேலும் இந்த தகவல் கிடைத்த 15 நாட்களில் கட்டிடத்தை எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் இடம் பெற்றது. ஒருவேளை இவ்வாறு செய்ய தவறி விட்டால் முழு இழப்பீடும் உரிமையாளர்களிடம் இருந்து பெற படும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை அந்த கட்டிடம் இடிக்கப்படாததால் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் இணைந்து தஞ்சையிலுள்ள சசிகலாவின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அரசியல் கட்சியை சார்ந்த ஒருவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டி இருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.