அண்டை மாநிலங்கள் உடனான தமிழக எல்லை மூடல்..! கொரோனா வைரஸ் எதிரொலி..!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபடும் நோக்கில் தமிழக அரசுடனான மற்ற மாநிலங்களில் எல்லைகளை மூட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


உலகையே உலுக்கி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. சீனாவிலுள்ள ஊகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த வைரஸ் தொற்று உலகெங்கிலும் பல நாடுகளில் தீவிரமாக பரவி தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நம்முடைய இந்திய நாடும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்ப முடியவில்லை.

இதுவரை நம் நாட்டில் 5 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நம்முடைய இந்திய அரசு பலவித முயற்சிகளை கையாண்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது வீடுகளிலிருந்து முடிந்தவரை வேலை செய்யவும் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என உலக சுகாதார நிலையம் கூறியிருக்கிறது.

மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை தமிழகத்துடன் இணைக்கும் சாலைகள் மூடப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த இணைப்புகள் மூடப்பட்ட நிலையிலும் அத்தியாவசிய பொருட்களான பால் , மருந்து பொருட்கள் , ஆம்புலன்ஸ் போன்ற வற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வாகனங்களை அனுமதிக்கலாம் எனவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் அவையாவும் தகுந்த சோதனைக்கு உட்படுத்த பின்பு அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.