தமிழக சட்டமன்றம் விரைவில் தொடங்கப் போகிறது ..? எங்கே நடக்கப் போகிறது ?

தமிழக சட்டப்பேரவையின் விதிகள்படி 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 2 முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24-ம் தேதி, கூட்டத்தொடர் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.


இப்போது, கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவெடுக்க, குளிர்கால கூட்டத்தொடர் கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை வளாகத்தில் நடத்த இயலுமா என்பது கேள்விக்குறிதான்.

வேறு எங்கெல்லாம் நடத்தலாம் என்று ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வாய்ப்பு தென்படுகிறது. அங்கு எப்படி நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்பதைப் பார்த்து, அதேபோன்று தமிழகத்திலும் கடைபிடிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஆக, மத்திய அரசு வழிகாட்டுதலுக்காக மாநில அரசு வெயிட்டிங்..