நானும் மு க ஸ்டாலின் கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் போல! பார்க்காமலே பேசிக்கொள்வோம்! கே எஸ் அழகிரி புகழாரம்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தன்னையும் ஸ்டாலினையும் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளாட்சித் தேர்தலை பற்றி ஆலோசிக்கும் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற இருப்பதாக கூறினார். இந்த கூட்டத்தில் திமுகவிடம் எத்தனை இடங்கள் கேட்கலாம் என்பதைப் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் போல நானும் ஸ்டாலினும் பார்க்காமலே பல விஷயங்களை பேசிக் கொள்வோம் அதுமட்டுமில்லாமல் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய செல்வாக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

இதன் மூலம் தமிழகத்தில் இந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று தான் கூற வேண்டும் என கே எஸ் அழகிரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது மேலும் பேசிய அவர் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நாங்கள் ஒத்துக் கொண்டோம். சிறுபான்மையினருக்கு தேவையான பாதுகாப்பு முறையாக வழங்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி இந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.