நாளையும் ஈபிஎஸ் தான் முதல்வர் !!இதுதான் ரஜினி கூறிய அந்த அதிசயம்! பகீர் தகவலை வெளியிட்ட இல.கணேசன்..

எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்பதை கருத்தில் கொண்டுதான் நடிகர் ரஜினிகாந்த் நாளையும் அதிசயம் நிகழும் என்று கூறியிருப்பதாக தமிழக பாஜக கட்சியின் தலைவர் இல. கணேசன் கூறியிருக்கிறார்.


முன்னாள் மத்திய இணையமைச்சர் ஓ.ராஜகோபாலன் மற்றும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. எஸ் .லட்சுமணன் உள்ளிட்டோருக்கு பாஜக கட்சி சார்பாக பாராட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. 

இந்த பாராட்டு விழா சென்னை தியாகராய நகரிலுள்ள பாஜக கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பாஜக பிரமுகர்கள் முன் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக கட்சியின் தலைவர் இல. கணேசனும் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி முடிவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளையும் அற்புதம் அதிசயம் நடைபெறும் என்று ரஜினி கூறும் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார்.

அதாவது மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக பதவி ஏற்பார் என்பதை கருத்தில் கொண்டுதான் நடிகர் ரஜினிகாந்த் நாளையும் அதிசயம் நடக்கும் என கூறியிருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று கருத்து தெரிவித்தார். 

இது நான் கூறியது அல்ல ரஜினியின் கூற்று. ரஜினி சொன்னதன் பொருளை தான் நான் இங்கு சொல்கிறேன் என்று கூறினார். மேலும் பேசிய அவர் ரஜினி திருவள்ளுவர் என்றால் நான் பரிமேலழகர் என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தை குறிப்பிட்டு தமிழக பாஜக கட்சியின் தலைவர் இல. கணேசன் இவ்வாறாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.