இன்றைய நாள் பலன் - பஞ்சாங்கம்

நவம்பர் 16, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 16, 2018

ஐப்பசி 30 – வெள்ளிக்கிழமை

இன்று சுவாமி மலை முருகனுக்கு விஷேச நாள்.   அவரை வழிபட்டு நன்மை அடையவும்.  இன்று பூதத்தாழ்வார் திருநஷத்திரம்.  ஆழ்வார் பாசுரங்களை படித்து பலன் பெறவும்.

இன்று பட்டன் தினம்.  நேஷனல் பட்டன் சொசைட்டி 1938-ல் தொடங்கப்பட்டது.  அன்று முதல் ஒவ்வொரு வருடம் நவம்பர் 16-ம் தேதி பட்டன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  பட்டன் என்பது சாதாரண பொருள்.  ஆனால் அதைவைத்து செய்யும் கைவேலைப்பாடுகள் ஏராளம்.  கடிகாரம், மணிபர்ஸ், காலில் அணியும் ஷு, கைபைகள், அலங்கார விளக்குகள் அனைத்திலும் பட்டன் ஒரு முக்கிய அலங்கார பொருளாக திகழ்கிறது.

இந்த தினத்தில் நாமும் பட்டன்களை சேகரித்து கைவேலைப்பாடுகள் செய்து மகிழ்வோம்.

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 9:15 முதல் 10:15 வரை

       மாலை 4:45 முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      காலை 10:30 முதல் 12:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  நல்ல உழைப்பு உயர்வைத்தரும்.

ரிஷபம்:  மிகவும் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்

மிதுனம்: இன்று மன அமைதியான வாழ்க்கை உண்டாகும்

கடகம்: நல்ல பேரும் புகழும் கிட்டும்.

சிம்மம்: மனம் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்

கன்னி: நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும்

துலாம்: நற்செயல் செய்வதின் மூலம் பலன் அடைவீர்கள்

விருச்சிகம்: செய்யும் செயலில் வெற்றி நிச்சயம்

தனுசு: உங்கள் நல்வாழ்வை நினைத்து பெருமை அடைவீர்கள்

மகரம்: மனக் கவலையை விலக்கி மகிழ்ச்சியுடன் இருங்கள்

கும்பம்: எதிர்பாராத தனவரவு கிட்டும்

மீனம்: பகைமை பாராட்டாவிடில் நலம் உண்டாகும்