பள்ளிக்கு சென்ற 11ம் வகுப்பு மாணவி எங்கே? பதற்றத்தில் ஆசிரியர்கள்! அதிர்ச்சியில் பெற்றோர்!

தாம்பரம் அடுத்த சேலையூரில் மத்திய அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆசிரியர் கண்டித்ததால் மாயம். புகைபடத்துடன் கூடிய துண்டு பிரசுரங்கள் ஒட்டபட்டு தேடி வருகின்றனர்.


சென்னை தாம்பரம் அடுத்த  சேலையூரை சேர்ந்தவர் அலோக் குமார். விமானபடை அதிகாரியான இவரின் மகள் சுவஸ்திகா

 குமாரி(15).அப்பகுதியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார் .11ம் வகுப்பிற்க்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று நடைபெற்ற தேர்வில் அருகில் இருந்த மாணவரை பார்த்து தோ்வு  எழுதியதை கண்ட ஆசிரியர் மாணவியை கண்டித்தாக கூறப்படுகிறது, இதனை அடுத்து மறுநாள் கண்டிப்பாக  பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி தனது பெற்றோரிடம் இதை பற்றி தெரிவிக்க வேண்டாம் எனறு கெஞ்சியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தேர்வு முடிந்தவுடன்  மாணவி பயந்த நிலையில் சென்றதால்,சில மணி நேரம் கழித்து அவரின் பெற்றோரிடம் மாணவி வீட்டிற்க்கு வந்துவிட்டாரா என்று பள்ளி ஆசிரியர்கள்  போன் செய்து  கேட்டுள்ளனர் .இதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்  வெகுநேரம் ஆகியும் மாணவி வராததால் அப்பகுதியில் உள்ள மாணவியின் நண்பர்கள் வீடுகளில் மற்றும் அக்கம்பக்கத்தில் இரவு முழுவதும் தேடி உள்ளனர் எங்கு தேடியும் மாணவி கிடைக்காத்தால் பின்னர் அருகில் உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலிசார் காணாமால் போன மாணவியை    தேடி வருகின்றனர்.