ஆத்தாடி அந்த தயாரிப்பு பிசினஸ்ஸே வேண்டாம்! தமன்னா - காஜல் எடுத்த திடீர் முடிவு!

தயாரிப்பாளர் அவதாரத்தில் இருந்து பின்வாங்குகிறார்கள் நடிகை காஜல் அகர்வால் மற்றும் தமன்னா.


நடிகை தமன்னாவும் காஜல் அகர்வாலும் மிகவும் நெருங்கிய தோழிகள் . இவர்கள் அவ்வப்போது தாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். 

இந்நிலையில் இருவரும் இணைந்து தயாரிப்பாளர் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு  இந்த செய்தியானது இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை தற்போது திடீரென்று இருவரும்  தயாரிப்பாளராக உருவெடுக்க  வேண்டும் என்ற கனவில் இருந்து பின்வாங்குகின்றனர் .

கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் லாபத்தை எடுப்பது மிகவும் கடினமான விஷயம் என்பதை அறிந்து கொண்டு இவர்கள் இருவரும் பின் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் இதற்கான உண்மை காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை.

இருப்பினும் நடிகைகளாக இவர்கள் இருவரும் தங்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார்கள் என இவர்களுடைய ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.