காஷ்மீர் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் தாலிபன் தீவிரவாதிகளா? திடுக் ரிப்போர்ட்!

காஷ்மீர் பிரட்சினையில் என்னை மத்தியஸ்தம் செய்ய அழைத்தார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சொல்லப்போக,அதை மோடியாக மறுத்தாரே நினைவிருக்கிறதா?.


ஆனால்,இப்போது 370 வது சட்டப்பிரிவை தூக்கி எறிந்து காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அமித்ஷா கூறு போட்டு இருக்கும் நேரத்தில் இதற்குப் பின்னால்,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மட்டுமல்ல,ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான்களும் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

அமெரிக்கப் படைகள் ஆப்கனுக்குள் நுழைந்து 18 வருடமாகிறது.இந்திய மதிப்பில் ஒருலட்சம் கோடிக்கு மேல் செலவு ஆகி இருக்கிறது இதுவரை.3000ம் அமெரிக்க படைவீரர்கள், ஆயிரம் நேட்டோ படையினரோடு 20 ஆயிரம் ஆப்கானியர்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.இவளவுக்குப் பிறகும் அங்கிருக்கும் தாலிபான் உட்பட துப்பாக்கியும் கையுமாக அலையும் 40க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்களை அமெரிக்காவால் அடக்க முடியவில்லை.

அமெரிக்காவின் தோல்வியாக கருதப்படும் என்றாலும் வரும் 2020 ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை வாபஸ்பெற ட்ரம்ப் முடிவெடுத்து விட்டார்.அமெரிக்க படைகள் வெளியேறி விட்டால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்று தெரியவந்துள்ளது.

இப்போது அமெரிக்காவிற்காக அடக்கி வாசிக்கப்படும் பாகிஸ்தான்- தாலிபான் நட்பு இன்னும் நெருக்கமாகும்.பாகிஸ்தான் தாலிபான்களை காஷ்மீருக்குள் இறக்கும்.என்கிறார்கள். இதை முன்கூட்டியே கணித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறது பிஜேபி அரசு.இப்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துச் செய்யப்பட்டு இருப்பதால் பிறமாநிலத்தவர் இங்கு குடியேறுவததிரும்பக்கூடும்.

தீவரவாதத்துக்கு பயந்து காஷ்மீரை விட்டு வெளியேறி இருந்த காஷ்மீர் பண்டிட்கள் நாடு திரும்பக்கூடும்.அவர்களுக்கும்,ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கும் அரசே குடியிருப்புகள் கட்டித்தர திட்டமிட்டு இருக்கிறது.இதனால்,காஷ்மீரின் புவியியல் அமைப்பு மாறும்.இதனால் பாகிஸ்த்தான் ஆதரவு  உள்ளூர் காஷ்மீரிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

அது தாலிபான்கள் போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர் கொள்ள எளிதாக இருக்கும் என்பதே அரசின் திட்டம் என்கிறார்கள். எத்தனை பொருளாதார சரிவுகள் ஏற்பட்டாலும்,போர் என்றால் இந்தியர்களின் ரத்தத்தில் தேசபக்தி பொங்கி அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவார்கள் என்கிற நம்பிக்கையில்தான் இத்தனையும் நடக்கிறது என்பதை நம்பவும் முடியவில்லை,நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.