திருப்பாச்சி, சிவகாசி! மிகப்பெரிய 2 ஹிட் கொடுத்த டைரக்டர்! கதை கூட கேட்க மறுக்கும் விஜய்! வேதனையில் பேரரசு!

விஜய் நடிப்பில் சிவகாசி, திருப்பாச்சி போன்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை திரை உலகிற்கு அளித்தவர் இயக்குனர் பேரரசு.


சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற சண்டை பயிற்சியாளர் ஜகு்ர் தங்கம் பேசுகையில் , இயக்குனர் பேரரசு தளபதி விஜய் வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என கூறியிருந்தார். இதற்கு முன்பாக இயக்குனர் பேரரசு தளபதி விஜயை வைத்து சிவகாசி , திருப்பாச்சி போன்ற மிகப்பெரிய ஹிட் திரைப்படங்களை தமிழ் திரை உலகிற்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து சமீபத்தில் இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார் . அப்போது பேசிய அவரிடம் இதனைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தளபதி விஜய் காண நல்ல கதையை நான் வைத்துள்ளேன் . அவர் என்னுடைய கதையில் நடிக்க தயார் என்று கூறினால் நான் படத்தை இயக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

தற்போது தளபதி விஜய் அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் . ஒருவேளை அவர் சம்மதித்து இந்த கதையில் நடிக்க ஒப்புக் கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியிருந்தார். தற்போது நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பின்பு மாநகரம் திரைப்பட இயக்குனர் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் . இந்த நிலையில் தான் இந்த படத்திற்கு பிறகு பேரரசு படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பேரரசு ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், விஜய் 65 படத்தை

பேரரசு இயக்கப்போவதாக

பத்திக்கையில் செய்தி வந்தது.

அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன்.

ஆனால் அச்செய்தி தொடர்ந்து வந்து தற்பொழுது உறுதியான

செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது .

நான் திரு. விஜய் அவர்களுக்காக

கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை,

நானும்,என் கதையும் திரு. விஜய் அவர்களுக்காக காத்திருக்கிறோம் என்பதும் உண்மை!

மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை !

இச்செய்தி உண்மையிலேயே

உறுதி செய்யப்பட்டால்,

நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்! நன்றி

இவ்வாறு பேரரசு கூறியுள்ளார். இந்த விளக்கத்தை பார்க்கும் போது விஜய் பேரரசுவை கதை கேட்க கூடஅழைக்கவில்லை என்று தெரிகிறது. அதோடு இதனால் ஏற்பட்ட விரக்தியில் தான் பேரரசு இப்படி வேதனையான ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார்.